search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை மரம்"

    • வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

    • வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது.
    • மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகள், வெல்ல ஆலையில் இருந்த குடியிருப்புகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது, வீடுகள் மீது மண்எண்ணை பாட்டில் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும், ஆயிரக்கணக்கான பாக்கு, வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றது.

    இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டும், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஏராளமான போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் கோவை மண்டல போலீஸ் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி (எ) சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் பயிர் செய்து இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலை விவசாய தோட்டத்திற்கு வந்த சுப்பிரமணி 5 ஏக்கரில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இது குறித்த தகவலின் பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் கமிஷனர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, பரமத்தி இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ சுகன்யா, பரமத்திவேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • இயற்கை பாதிப்புகளின் போது வாழைக்கு ஏற்படும் சேதத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளின் போது வாழைக்கு ஏற்படும் சேதத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் மழைக்கு பல இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:- இயற்கை சீற்றத்தின் போது சேதம் ஏற்படும் வாழைக்கு காப்பீடு வழங்க ப்படும் என தோட்டக்கலை த்துறையினர் நம்பிக்கைய ளிக்கின்றனர். அதனை நம்பியே காப்பீடு திட்டத்தில் இணைகிறோம்.வருவாய் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கள ஆய்வு செய்த பிறகே, சேத அறிக்கையை காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.திடீர் மழை, சூறைக்காற்றுக்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பல்வேறு காரணங்களை கூறி காப்பீடு மறுக்கப்ப டுகிறது. சமீபத்தில் மழை, சூறவாளிக்கு 75 ஆயிரம் வாழை மரங்கள் வரை சாய்ந்திருக்கும்.அவற்றுக்கு காப்பீடு, இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்து தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் அதிகம் வாழை பயிரிடுகின்றனர்.
    • அரசு பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீடு இருந்தும், எதிர்பார்க்கும் நேரத்தில் இழப்பீடு கிடைப்பதில்லை.

    குடிமங்கலம் :

    வாழை மரங்கள் சூறா வளிக்கு சேதமாவதை தடுக்க இலவசமாக காற்று த்தடுப்பான் சவுக்கு வளர்க்கலாம் என வனத்து க்குள் திருப்பூர் திட்டக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

    கோவை, திருப்பூர் மாவட்ட ங்களில் விவசாயி கள் அதிகம் வாழை பயிரிடு கின்றனர். வாழைக்கு அரசு பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீடு இருந்தும், எதிர்பா ர்க்கும் நேரத்தில் இழப்பீடு கிடைப்பதில்லை. வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை நிவார ணமும், விவசாயிகளுக்கு விரைவாக கிடைப்பதில்லை. வாழை த்தார் அறுவடை செய்யும் நேரத்தில் அடி யோடு வாழை மரம் முறிந்து விழுவதால் ஓராண்டு உழைப்பு வீணாகி விடுகிறது. வாழை விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் மத்திய அரசின் வன மரபியல் ஆராய்ச்சி மற்றும் மரப்பெருக்கு நிறு வனம், காற்றுத்தடு ப்பான் சவுக்கு மரக்கன்றை உரு வாக்கியது. மரம் வளர்ப்பில் ஈடுபடும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு இலவ சமாக காற்றுத்தடுப்பான் மரக்கன்றுகளை நட்டு கொடுக்கிறது.இது குறித்து வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் கூறுகையில்,

    வாழை மரங்கள் சூறா வளிக்கு முறிந்து சேதமாவது வருத்தம் அளிக்கிறது. விவ சாயிகள் பாதிக்கப்படு வதை தவிர்க்க உயிர்வேலி யாக காற்றுத்தடுப்பான் சவுக்கு மரம் வளர்க்கலாம். விவசாயிகளுக்கு இலவச மாக நாற்றுகளை வேலியாக நட்டு கொடுக்கி றோம். வேளாண் பயிர்களை பாது காக்க சவுக்குவேலி அமைக்க லாம். மேலும் விவரங்களுக்கு 9047086666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.   

    • 6 பேர் மீது வழக்குப்பதிவு
    • வாழை மரங்கள் வெட்டி சாய்த்ததால் ரூ. 30 ஆயிரம் இழப்பு

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி செறுகாட்டு விளையை சேர்ந்தவர் வில்சன் (வயது 58) இவருக்கு சொந்தமான நிலத்தில் 15 -ரப்பர் மரங்களும் 70 - வாழை மரங்களும் நட்டு பராமரித்து வந்துள்ளார் .

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதத்தில் உண்ணாமலைக்கடை பாண்டியன் விளையை சேர்ந்த சீமா (37), திக்குறிச்சியைச் சேர்ந்த பிரவீன் (35) திக்குறிச்சியை சேர்ந்த வசந்தா (25) ஆகியோர் நிலத்தினுள் புகுந்து வாழை மரங்களை வெட்டி சாய்த்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது

    வாழை மரங்கள் வெட்டி சாய்த்ததால் ரூ. 30 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெத்தானூர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்துள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னு (வயது55). இவருக்கு சொந்தமாக விவசாயி நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.

    இன்று காலை சின்னு தனது விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார். அப்போது பயிரிட்டுள்ள வாழைமரங்களை 2 காட்டு யானைகள் சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே யானையை விரட்ட சின்னு முயன்றார். ஆனால் யானை காட்டுக்குள் செல்ல மறுத்துவிட்டது.

    இது குறித்து சின்னு வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் சுமார் 1 அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள வாழைமரங்கள் காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்தார்.
    அற்புதப் பலன் தரும் வாழை மரத்தை வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வளர்த்தால் வம்ச விருத்தி ஏற்படும். வடக்கில் வாழை குலை தள்ளினால் மிகுந்த யோகம்.
    மரம் வளர்ப்போம்!, மழை பெறுவோம்! என்ற வாக்கியத்தை அரசு நாடெங்கிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. திருமண வாழ்த்துகளில் வாழையடி வாழையாக வாழ்க! என்று தம்பதியரை வாழ்த்துவது வழக்கம்! அந்த அடிப்படையில் தன் உடல் முழுவதையுமே உடல் நலம் பேணத் தரும் வாழையின் வாழ்க்கை ஒரு தியாக வாழ்க்கை.

    அந்த வாழ்க்கையை நாமும் பின்பற்ற வேண்டும். பிறருக்காகப் பாடுபட வேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காகத் தான் மங்கல நிகழ்வுகளில் தோரணமாக வாழை மரத்தைக் கட்டுகிறார்கள்.

    அந்த அற்புதப் பலன் தரும் வாழை மரத்தை வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வளர்த்தால் வம்ச விருத்தி ஏற்படும். வடக்கில் வாழை குலை தள்ளினால் மிகுந்த யோகம். உடனே அதற்கு பொங்கல் வைத்து வழிபடுவது செட்டிநாட்டு வழக்கமாக உள்ளது. 
    ×